Home நாடு கேமரன் மலை தமிழ்ப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி வழிகாட்டிப்பட்டறை

கேமரன் மலை தமிழ்ப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி வழிகாட்டிப்பட்டறை

1089
0
SHARE
Ad

unnamed (6)கேமரன் மலை, ஜூலை 23 – ஆறாம் ஆண்டு மாணவர்கள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 8,9,10 ஆம் திகதிகளில் யூ.பி.எஸ்.ஆர் சோதனையை மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்வு வழிகாட்டிப்பட்டறைகள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 17.07.2015ஆம் நாளில் கேமரன் மலையிலுள்ள ஏழு தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்ட தமிழ்மொழிப் பாடத்திற்கான வழிகாட்டிப்பட்டறையைத் திறமிகு ஆசிரியரும் நாடறிந்த எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.

unnamed (3)

நாட்டின் உயர்தர பள்ளியான ரிங்லெட் தமிழ்ப்பள்ளியில் நான்கு மணி நேரம் இப்பட்டறையை ஆசிரியர் கே.பாலமுருகன் நடத்தினார். அவர் எழுதி வெளியிட்டிருக்கும் சுடர் நூல்களையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார். ரிங்லெட் தமிழ்ப்பள்ளி, தானா ராத்தா தமிழ்ப்பள்ளி, குவாலா தெர்லா தமிழ்ப்பள்ளி, லாடாங் சுங்கை பாலாஸ் தமிழ்ப்பள்ளி, ப்லு வெல்லி தோட்டத்தமிழ்ப்பள்ளி, லாடாங் போ பிரிவு 1 தமிழ்ப்பள்ளி, லாடாங் சாம் யிப் லியோங் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தமிழ்மொழித் தேர்வெழுதும் நுட்பங்களைத் தெரிந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

unnamed (5)

காலை மணி 8.30க்குத் தொடங்கிய ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான அப்பட்டறையில் உயர்நிலைச் சிந்தனையுடனும் கற்பனைத்திறனுடனும் கட்டுரை, கதை எழுதும் உத்திகளை மாணவர்கள் இரசிக்கும் வகையில் எழுத்தாளர் பாலமுருகன் விளக்கம் அளித்தார். பட்டறையில் கலந்து கொண்ட பல மாணவர்கள் ஏற்கனவே கதை, நாவல் வாசித்தலில் ஆர்வத்துடனே காணப்பட்டனர்.

unnamed (7)

 

இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் மாணவர்களின் கற்பனைத்திறனும் உயர்நிலைச் சிந்தனையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படையான தேவையாகும். சிறந்த புள்ளிகள் பெற அவை மாணவர்களுக்கு உறுத்துணையாக இருக்கம் என தமிழ்மொழிக்கான பயிற்றுனர் திரு.கே.பாலமுருகன் கேட்டுக்கொண்டார். இந்த வழிகாட்டிப்பட்டறையை முன்னின்று நடத்திய ரிங்லெட் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அருணகிரிநாதன் அவர்கள் இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கவனத்தில் கொண்டே நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.