Home நாடு பாஸ் கட்சியிலேயே நீடிக்கப் போகின்றாரா மாட் சாபு?

பாஸ் கட்சியிலேயே நீடிக்கப் போகின்றாரா மாட் சாபு?

696
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 26 – புதிய கட்சியான ஜிஎச்பி (கெராக்கான் ஹாராப்பான் பாரு) அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும் வரையில் மாட் சாபு பாஸ் கட்சியிலேயே நீடிக்க உள்ளார். தன்னால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமான கெராக்கான் ஹராபான் பாரு (ஜிஎச்பி) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பின்னர் பாஸ் கட்சியில் உள்ள தனது உறுப்பியம் தன்னால் துண்டிக்கப்படும் என்றார் அவர்.

mat_sabuபாஸ் கட்சியில் புதிதாக 6 ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதாக பினாங்கு பாஸ் ஆணையர் ஃபௌசி முகமட் யூசோஃப் வெளியிட்ட அறிக்கை குறித்து மாட் சாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ஃபௌசியின் அந்த அறிவிப்பானது தம்மை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

“இதன் மூலம் எங்களது இயக்கம் குறித்து அவர்கள் (பாஸ்) கவலை கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது,” என்றார் மாட் சாபு.

#TamilSchoolmychoice

இதற்கிடையே விவாகரத்து விவகாரம் குறித்து கருத்துரைக்க மறுத்த அவர், தாம் எந்தவொரு மத அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என்பதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.