Home இந்தியா மத்தியப் பிரதேசம் ரயில் விபத்தில் 30 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

மத்தியப் பிரதேசம் ரயில் விபத்தில் 30 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

605
0
SHARE
Ad

Narindra-Modiபுதுடில்லி, ஆகஸ்ட் 5- மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தா எனும் பகுதியில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் ஒரே இடத்தில் தடம் புரண்டன. இதில் 29 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர்,

இந்தக் கோர விபத்திற்குப் பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“மத்தியப் பிரதேசத்தில் நடந்த இரட்டை ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். விபத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலமையை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice