Home உலகம் துணைப் பிரதமருக்கும் மரண தண்டனை நிறைவேற்றம் – அதிர்ச்சி அளிக்கும் வட கொரியா!

துணைப் பிரதமருக்கும் மரண தண்டனை நிறைவேற்றம் – அதிர்ச்சி அளிக்கும் வட கொரியா!

1408
0
SHARE
Ad

n.korea2பியாங்யங், ஆகஸ்ட் 13 – வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னிற்கு(படம்) எதிராக அதிருப்தி தெரிவித்த துணைப் பிரதமர் சோ யோங்-கோன்னிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் துணை பிரதமராக பதவி ஏற்ற சோ யோங்-கோன், கடந்த மே மாதம் கொல்லப்பட்டார். அதிபர் கிம் ஜோங்-உன்னிற்கு எதிரான கருத்துக்களை யோங்-கோன் தெரிவித்ததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.”

“சோ யோங்-கோன் கடைசியாக, கடந்த டிசம்பர் மாதம் கிம் ஜோங்-II-ன் நினைவு தினத்தில் தான் ஊடகங்களில் காட்சி அளித்தார். அதன் பிறகு அவர் வெளியில் வரவே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பற்றி, வட கொரியா வழக்கம் போல் வாய் திறக்க மறுக்கிறது. ஒருவேளை சோ யோங்-கோன் கொல்லப்பட்டது உறுதி எனில், இந்த வருடத்தில் வட கொரியா நிகழ்த்திய இரண்டாவது அதிர்ச்சிகரமான மரண தடனை இதுவாகத் தான் இருக்கும். ஏற்கனவே, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்யோன் யோங் சோலுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.