Home நாடு மலாக்கா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி; பலரைக் காணவில்லை!

மலாக்கா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி; பலரைக் காணவில்லை!

583
0
SHARE
Ad

201509031537181812_Boat-carrying-at-least-70-sinks-off-Malaysian-coast_SECVPFமலாக்கா – மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு 70க்கும் மேற்பட்ட ஆட்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று, மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபாக் பெர்னாம் நகருக்கு அருகே மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை அறிந்த மீனவர்கள் விரைந்து வந்து 15 பேரை மீட்டனர். 13 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். பலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் 12 கப்பல்கள்களும் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

படகில் வந்தவர்கள் அகதிகளா அல்லது சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறிப் பின் இந்தோனேஷியாவிற்குக் கள்ளப் படகேறிச் சென்றவர்களா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice