கொழும்பு- இலங்கையில் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள மத்தல என்ற இடத்தில் ராஜ்பக்சே 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச விமான நிலையம் கட்டி, திறப்பு விழாவும் நடத்தினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு விமானப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. ஆனால் போதிய பயணிகள் வராததால், படிப்படியாகப் போக்குவரத்து குறைந்து, தற்போது ஒரே ஒரு விமானம் மட்டும் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
அந்த விமான நிலையம் அமைந்துள்ள இடம் காட்டுப் பகுதியாகும். அங்கு ஏராளமான பறவைக் கூட்டம் இருப்பதால், பறவைகள் மோதி விமான விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி, இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள ரணில் மற்றும் சிறிசேனா அரசு, அந்த விமான நிலையத்தை இழுத்து மூடி விட்டு, அரிசி மூட்டைகளைக் கொண்டு வந்து அதில் அடைத்து வைத்து அரிசி சேமிப்புக் கிடங்காக மாற்றிவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் நடத்திப் பார்த்தனர். எதற்கும் அரசு அசையவில்லை. அதனால், எதிர்ப்புப் போராட்டமும் அமுங்கிப் போய் தற்போது அது முழு நேர சேமிப்புக் கிடங்காகி விட்டது.