Home உலகம் தவறு தான் மன்னிப்பு கோருகிறேன் – மின்னஞ்சல் சர்ச்சை குறித்து ஹிலாரி வருத்தம்!

தவறு தான் மன்னிப்பு கோருகிறேன் – மின்னஞ்சல் சர்ச்சை குறித்து ஹிலாரி வருத்தம்!

543
0
SHARE
Ad

Hillaryநியூ யார்க் – அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர்களுள் முன்னணியில் இருப்பவரான ஹிலாரி கிளிண்டன் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சை வெடித்தது. அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் (2009 – 2011) தனது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கினை அரசு பணிகளுக்கு பயன்படுத்தியது தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. அரசின் இரகசியத் தகவல்கள் இதனால் அம்பலமாகலாம் என பலர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக ஆரம்பம் முதல், “தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை அரசுப்பணிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதனால், எவ்வித வருத்தமும் தெரிவிக்கமாட்டேன்” என்று ஹிலாரி கூறி வந்தார்.

எனினும், தேர்தல் களம் நெருங்க நெருங்க, இந்த பிரச்சனை பூதாகரமாகுமோ என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களும் இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர் தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை அரசுப்பணிக்கு பயன்படுத்தியது தவறுதான். நான் இரண்டு மின்னஞ்சல் கணக்குகளை பராமரித்து வந்திருக்க வேண்டும். ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்கும், மற்றொன்றை அரசுப்பணிகளுக்கும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்துவிட்டேன். நான் அந்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.