Home உலகம் “எங்கள் தலைவன் மகிந்த ராஜபக்சவே!”- கிளிநொச்சியில் அரசிற்கு ஆதரவான கோஷங்கள்

“எங்கள் தலைவன் மகிந்த ராஜபக்சவே!”- கிளிநொச்சியில் அரசிற்கு ஆதரவான கோஷங்கள்

582
0
SHARE
Ad

arpadam_vavuniya_001இலங்கை, மார்ச்.12-கிளிநொச்சி நகரில் அமெரிக்காவுக்கு எதிரானதும் ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிரானதுமான ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் என்னும் நோக்கங்களுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை கொண்டு அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளது.

முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  பகுதிகளில் இருந்து பஸ்களில் ஏற்றி வரப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளைக் கொண்டு கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் அமெரிக்காவுக்கும் ஜெனீவாத் தீர்மானங்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கீதாஞ்சலி, “அமெரிக்காவே நீ உனது வேலையைப் பார்த்துக்கொள்”,  “எமது வேலையை நாம் பார்த்துக்கொள்வோம்” என்று கோஷங்கள் எழுப்பினார்.

சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் மேடையில் ஏறி தான் இந்த நாட்டுக்காக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடி புனர்வாழ்வு பெற்று இப்போது சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து தான் வளமாக வாழ்வதாக கூறி அமெரிக்காவுக்கும் ஜெனீவாத் தீர்மானங்களுக்கும் எதிரான கோசங்களை எழுப்பியிருந்தார்.

மேற்படி இந்த ஆர்ப்பாட்டத்தில் வயிற்று பிழைப்புக்காக சிவில் பாதுகாப்பு படையில் வேலைக்கு சென்று இப்படியான ஆர்ப்பாட்டங்களில் கட்டாயப்படுத்தப்பட்டு கலந்து கொள்கின்றோம் என்றும் பல இளைஞர் யுவதிகள் கூறி வேதனைப்பட்டும் கொண்டார்கள்.