பாரிஸ் – பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலால் அங்கு நூறுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். சுமார் 350 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் தேவை என பிரான்ஸ் ஊடகங்கள் நேற்று முதல் அறிவிப்புகளை வெளியிடத் துவங்கின. இதனைத் தொடந்து அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் நூற்றுக்கணக்கான மக்கள் ரத்ததானம் செய்ய மருத்துவ முகாம்களை சூழ்ந்தனர்.
அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதும் மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மக்கள் தன்முனைப்புடன் ரத்ததானம் அளித்துள்ளதால், தேவையான அளவிற்கு ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.