Home Featured நாடு 2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!

634
0
SHARE
Ad

najib1கோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் ‘நன்கொடை’  பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர் மற்றும் இன்னும் 5 கட்சிகள் தாக்கல் செய்திருந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த வழக்கு நிலைப்புத்தன்மையின்றி உள்ளதாக நீதிபதி மொகமட் ஜக்கி அப்துல் வாகாப் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாரிசான் சார்பில் நஜிப், அட்னான், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோர் தனித்தனியாக இந்த வழக்கை நிராகரிக்கவும் நீதிபதி அனுபதி வழங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

சிவில் நீதிமன்றமாக இருப்பதால், நஜிப் அல்லது பாரிசானுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைகளை பிரயோகிக்க இயலாது என்றும் மொகமட் ஜக்கி கூறியுள்ளார்.

அதேவேளையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்க இயலாது என்றும், தேர்தல் நீதிமன்றத்தால் மட்டுமே முடிவெடுக்க இயலும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், 1எம்டிபி-க்கு எதிரான நிரூபிக்கப்படாத ஆரூட அறிக்கைகளைக் கொண்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்பதால், இந்த வழக்கு நிலைப்புத்தன்மையற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.