இலண்டன் -“ஒரு காலத்தில் நான்தான் பிரிட்டனின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்பட்டேன்” என்று கூறி, டேவிட் கேமரூன் சோகத்துடன் தனது பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகியிருக்கின்றார்.
பிரிட்டன் பிரதமர்கள் வழக்கமாகத் தங்கும், எண்: 10, டவுனிங் சாலை இல்லத்திலிருந்து கேமரூன் வெளியேறியுள்ள வேளையில், புதிய பிரதமராக அடியெடுத்து வைக்கும் தெரசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனைப் பிரித்தெடுக்கும் பெரும் பணியில் இனி ஈடுபடுவார்.
பதவி விலகிய நிம்மதியில் தனது செல்லப் பூனையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் டேவிட் கேமரூன்…(படம்: நன்றி – டேவிட் கேமரூன் டுவிட்டர் பக்கம்)
முதல் கட்டமாக ‘பிரெக்சிட்’ (Brexit) எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேறல் தொடர்பாக அலுவல்களை கவனிக்க, தனியாக ஓர் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தெரசா மே, அதற்காக தனியாக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்துவதற்காக அடையாளம் காண, தனது அதிகாரிகளுக்கு பிரதமர் என்ற முறையில் தனது முதல் கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.