Home Featured நாடு மே 13 கருத்து – ஜமால் யூனுஸ் மீது நடவடிக்கை – ஐஜிபி அறிவிப்பு!

மே 13 கருத்து – ஜமால் யூனுஸ் மீது நடவடிக்கை – ஐஜிபி அறிவிப்பு!

719
0
SHARE
Ad

red-shirt-group-jamal-yunus

கோலாலம்பூர் – சிவப்பு சட்டை அணியின் தலைவர் அம்னோவைச் சேர்ந்த டத்தோ ஜமால் யூனுஸ், மே 13 மாதிரியான போராட்டம் வெடிக்கும் என சமூக வலைத் தளங்களில் தெரிவித்துள்ள கருத்து குறித்து காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘பெர்சே 5 பேரணி நடந்தால், பாராங் கத்திகள் பறக்கும், மே 13 அசம்பாவிதம் மீண்டும் திரும்பும் என நான் உறுதி கூறுகின்றேன்’ என ஜமால் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

jamal-yunus-may-13-twitter-posting

ஜமால் யூனுசின் மே 13 குறித்த முகநூல் பதிவு இதுதான்!

இதுபோன்ற கருத்துக்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது, காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என காலிட்  அபு பாக்கார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கின்றார்.

khalid-abu-bakar-yunus-twitter-reply-may-13

இதற்கிடையில், செப்டம்பர் 21-ஆம் தேதி பதிவிடப்பட்ட அந்த கருத்து தன்னுடையதல்ல என்றும், சம்பந்தப்பட்ட அந்த முகநூல் பக்கம் தன்னுடையதல்ல போலியானது என்றும் ஜமால் மறுப்பு தெரிவித்துள்ளார்.