பியோங்யாங் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களில், அமெரிக்காவின் பசிபிக் பகுதியான குவாமைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக வடகொரியா அறிவித்திருக்கிறது.
இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையில் பதற்றநிலை நீடித்து வருகின்றது.
சுமார் 1,63,000 மக்களைக் கொண்ட அமெரிக்க இராணுவத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட பகுதியான குவாமில், கடற்படை மற்றும் விமானப் படைப் பிரிவுகள் இருக்கின்றன.
இந்நிலையில், வடகொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ-வுக்கு வடகொரிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், அதிபர் கிம் ஜோங் உன்னின் முடிவிற்காகத் தாங்கள் காத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.