Home உலகம் கொடி விவகாரம்: மலேசியாவின் மன்னிப்பை ஏற்றது இந்தோனிசியா!

கொடி விவகாரம்: மலேசியாவின் மன்னிப்பை ஏற்றது இந்தோனிசியா!

1173
0
SHARE
Ad

Joko Widodo walikota Surakarta. (tarko sudiarno)ஜகார்த்தா – கோலாலம்பூரில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகள் 2017-க்காக, தயாரிக்கப்பட்டிருந்த நினைவுப் புத்தகங்களில் இந்தோனியக் கொடி தலை கீழான நிலையில் அச்சிடப்பட்டிருந்ததற்கு மலேசியா மன்னிப்புக் கேட்டது.

இந்நிலையில், மலேசியாவின் மன்னிப்பை ஏற்பதாக இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோ கூறியிருக்கிறார்.

இது குறித்து இந்தோனிசிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் தகவலில், “இந்த விவகாரத்தில் அதிபர் அதிகமாக உணர்ச்சிவசப்படவில்லை. என்றாலும், மலேசியா தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்பதோடு, தவறுதலாக அச்சிடப்பட்ட நினைவுப் புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் போதும்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice