சிங்கப்பூர் – சிங்கப்பூரின் அதிபர் தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது.
இம்முறை, அதிபர் தேர்தலில் போட்டியிட சிங்கப்பூர் மலாய் இனத்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அதிபர் வேட்பாளராக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட செகண்ட் சான்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மொகமட் சாலே மெரிக்கன் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தனது வேட்புமனுவைத் தாக்க செய்தார்.
செப்டம்பரில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், வேட்பாளர்களாக எதிர்பார்க்கப்பட்ட மூவரில், மெரிக்கனும் ஒருவர்.
இன்னும் இரண்டு பேரான முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஹாலிமா யாக்கோப்பும், பார்பன் ஆஃப்ஷோர் ஆசியாவின் தலைவர் ஃபரித் கான் காலிம் கானும் விரைவில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.