Home நாடு காவல் துறை அதிகாரி கொலை – விமானத்தில் பிடிபட்டான் சந்தேக நபர்!

காவல் துறை அதிகாரி கொலை – விமானத்தில் பிடிபட்டான் சந்தேக நபர்!

846
0
SHARE
Ad

Arrest1(C)_23பெட்டாலிங் ஜெயா – சுபாங் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரி வாலண்டினோ மெசா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவில் வரும் பரபரப்புக் காட்சிக்கு இணையாக, அந்த சந்தேக நபர் சிபு (சபா) செல்லும் விமானத்தில் இருந்தபோது, விமானம் புறப்பட இருந்த நிலையில் விமானத்திற்குள் நுழைந்து காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.

அந்த சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட காவல் துறை அதிகாரியின் உறவினர் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை சந்தேக நபர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் வாலண்டினோ தனி நபராகப் பணியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.