Home உலகம் சிங்கப்பூரின் அடுத்த அதிபர் ஹாலிமா யாக்கோப்!

சிங்கப்பூரின் அடுத்த அதிபர் ஹாலிமா யாக்கோப்!

1010
0
SHARE
Ad

halimah_yacob-parliament speaker-singaporeசிங்கப்பூர் – சிங்கப்பூரின் அடுத்த அதிபராக ஹாலிமா யாக்கோப் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அவருடன் போட்டியிட்ட மற்ற இரண்டு பேர் அதிபருக்கான தகுதிப் பட்டியலில் முழுமை பெற முடியாத காரணத்தால் ஹாலிமா யாக்கோப் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து சிங்கப்பூர் தேர்தல் ஆணையம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில், இப்போட்டியில் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே தகுதிப் பெற்றதாகத் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

ஆனால், அது யார் என்று அறிவிக்கவில்லை. எனினும், மொகமட் சாலே மெரிக்கனும், ஃபரித் கானும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினர்.