Home இந்தியா ஜெ’ காணொளியை ஒளிபரப்ப வேண்டாம் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

ஜெ’ காணொளியை ஒளிபரப்ப வேண்டாம் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

941
0
SHARE
Ad

Jayalalithahospitalvideoசென்னை – ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளி ஒன்றை, டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று புதன்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

அக்காணொளியின் உண்மைத்தன்மை தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் கேள்வியை எழுப்பி வருவது ஒருபுறம் இருக்க, நாளை வியாழக்கிழமை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அக்காணொளி விதிமுறை மீறல் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அக்காணொளியை வெளியிட்ட வெற்றிவேல் மீதும், தினகரன் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், ஊடகங்கள் அக்காணொளியை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிக்கை விடுத்திருக்கிறது.