Home உலகம் தென்கொரிய மருத்துவமனையில் தீ விபத்து – 31 பேர் பலி!

தென்கொரிய மருத்துவமனையில் தீ விபத்து – 31 பேர் பலி!

984
0
SHARE
Ad

SouthKoreaசியோல் – தென்கொரியாவில் இன்று வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் பலியாகினர்.

மிரியாங்கில் உள்ள அக்கட்டிடத்தின் மேல், ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டு தீயை அணைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் யான்ஹாப் ஊடகத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தீவிபத்து ஏற்பட்ட போது, செஜோங் என்ற அம்மருத்துவமனையில் 200 பேர் இருந்ததாகவும், அந்த ஊடகம் தகவல் தெரிவித்திருக்கிறது.