Home நாடு இந்தியர்களுக்கு மகாதீர் அன்றே செய்திருந்தால் நன்றாக இருந்திருப்பார்கள்: டாக்டர் சுப்ரா

இந்தியர்களுக்கு மகாதீர் அன்றே செய்திருந்தால் நன்றாக இருந்திருப்பார்கள்: டாக்டர் சுப்ரா

1032
0
SHARE
Ad

subra-dr-selliyal-featureகோலாலம்பூர் – தன்னுடைய பதவிக் காலத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இந்திய சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்திருந்தால் இந்நேரம் இந்நாட்டில் இந்திய சமுதாயத்தினரின் நிலை நன்றாகவே உயர்ந்திருக்கும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பாரில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மகாதீர், தான் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் இந்திய சமுதாயத்தை நன்றாகக் கவனித்துக் கொள்வேன் என அங்கிருந்த இந்திய மக்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தார்.

அது குறித்து டாக்டர் சுப்ராவிடம் செய்தியாளர்கள் நேற்று கருத்துக் கேட்டதற்கு, “22 ஆண்டுகாலத்தில் (பிரதமர் பதவி காலத்தில்) இதனை அவர் (மகாதீர்) செய்திருந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். இந்நேரம் இந்திய சமுதாயம் அதன் நிலையில் இருந்து நன்றாகவே உயர்ந்திருக்கும்” என நேற்று திங்கட்கிழமை பிரிக்பீல்ட்ஸ் நுண்கலை கலாலயத்தில் நடைபெற்ற உலக புற்றுநோய் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.