Home கலை உலகம் ஸ்ரீதேவியின் உயிரற்ற உடல் நாடு திரும்பிய சோகம்!

ஸ்ரீதேவியின் உயிரற்ற உடல் நாடு திரும்பிய சோகம்!

1268
0
SHARE
Ad

மும்பை – தனது காதல் கணவர் துணைவர, அன்பு மகள்கள் ஜான்வி, குஷி விமான நிலையத்தில் தாங்க முடியாத இழப்புடன் காத்திருக்க, பாசத்திற்குரிய குடும்பத்தினர் கண்ணீர் மல்க நின்றிருக்க, நடிகை ஸ்ரீதேவியின் உயிரற்ற உடல் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் (மலேசிய நேரம் நள்ளிரவு 12.00 மணி) தனியார் விமானத்தில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.

பின்னர் அவரது நல்லுடல் மும்பையிலுள்ள போனிகபூரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,அங்கு நேற்றிரவு முதல் திரையுலகப் பிரபலங்கள், பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் நல்லுடல் நேற்றிரவு மருத்துவ வாகனத்தில் அவரது இல்லத்திற்குக் கொண்டுவரப்படுகிறது

இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணி முதல் 12.30 மணிவரை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது நல்லுடல் மும்பை மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட் கிளப் (Celebration Sports Club) என்ற இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் பிற்பகல் 3.30 மணிமுதல் அவரது இறுதிச் சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்.