Home உலகம் “ஏன் நீக்கப்பட்டேன் – எனக்குத் தெரியாது” – ரெக்ஸ் டில்லர்சன்

“ஏன் நீக்கப்பட்டேன் – எனக்குத் தெரியாது” – ரெக்ஸ் டில்லர்சன்

1209
0
SHARE
Ad
மைக் பொம்பியோ – அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர்

வாஷிங்டன் – இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரெக்ஸ் டில்லர்சன், தான் நீக்கப்பட்டது குறித்து தனக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணமும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரெக்ஸ் டில்லர்சனுக்குப் பதிலாக சிஐஏ எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநரான மைக் பொம்பியோ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

மைக் பொம்பியோவுடன் அண்மைய சில மாதங்களாகத் தான் பழகியதில் அவரது திறமைகள் தன்னைக் கவர்ந்திருப்பதாகக் கூறிய டிரம்ப், “அவரும் நானும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறோம்” என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

சிஐஏ அமைப்புக்கு முதல் பெண் இயக்குநர்

ஜினா ஹாஸ்பெல் – சிஐஏ அமைப்பின் முதல் பெண் இயக்குநர்
#TamilSchoolmychoice

இதற்கிடையில் காலியாகியுள்ள சிஐஏ இயக்குநர் பதவிக்கு ஜினா ஹாஸ்பெல் என்ற பெண்மணியை டிரம்ப் நியமித்துள்ளார். இதன் மூலம் சிஐஏ-யின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையையும் ஜினா ஹாஸ்பெல் பெறுகிறார்.