சியோல் – ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹைக்கு, இன்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
சியோல் மத்திய வட்டார நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரணை செய்த 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், பார்க் மீதான 12-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக பார்க், மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பார்க்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஏராளமான ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.