Home நாடு 40 ஆயிரம் பேர் முன்னிலையில் தே.மு. தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்

40 ஆயிரம் பேர் முன்னிலையில் தே.மு. தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்

997
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணியின் 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

அரங்கின் உட்புறத்திலும், சுற்றுப் புறத்திலும் சுமார் 40 ஆயிரம் பேர் திரண்டிருப்பதாகவும், நாடு முழுமையிலும் சுமார் 4 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி நேரலையில் மூலம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் நஜிப் உற்சாகத்துடன் அறிவித்தார்.

மேடையில் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் சூழ்ந்திருக்க, அனைத்துத் தலைவர்களும், வருகையாளர்களும், தேசிய முன்னணியின் அதிகாரபூர்வ வண்ணமான நீலநிற வண்ணத்திலான ஆடைகள் அணிந்திருக்க, இரவு 8.45 மணியளவில் தனது உரையை நஜிப் தொடங்கினார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு தான் ஆற்றப் போகும் உரையின் வடிவத்தை சரிபார்க்கிறார் நஜிப். இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் தளத்தில் நஜிப்பே வெளியிட்டிருக்கிறார்.