Home நாடு பண்டார் துன் ரசாக்கை மசீச விட்டுத்தராது – வீ கா சியோங் திட்டவட்டம்!

பண்டார் துன் ரசாக்கை மசீச விட்டுத்தராது – வீ கா சியோங் திட்டவட்டம்!

941
0
SHARE
Ad
வீ கா சியோங்

கோலாலம்பூர் – பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், மசீசவிற்கு ஒதுக்கப்பட்டு வரும் அத்தொகுதியை தாங்கள் விட்டுத்தரமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் வீ கா சியோங் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஷாரிசாட் போட்டியிடப்போவதாகக் கூறப்படும் தகவலையும் அவர் மறுத்திருக்கிறார்.

“இதுவரை, பண்டார் துன் ரசாக்கில் போட்டியிடுவார் என 5 வேட்பாளர்களின் பெயர்களைக் கேட்டு வருகின்றேன். யாரை நம்பச் சொல்கிறீர்கள்? கவலை வேண்டாம். அத்தொகுதியைத் தற்காப்போம்” என வீ கா சியோங் கூறியிருக்கிறார்.