Home நாடு “இவர்கள்தான் எனது வேட்பாளர்கள்” – டாக்டர் சுப்ரா அறிமுகப்படுத்தினார்

“இவர்கள்தான் எனது வேட்பாளர்கள்” – டாக்டர் சுப்ரா அறிமுகப்படுத்தினார்

1214
0
SHARE
Ad
14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களோடு டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை (24 ஏப்ரல் 2018) பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டடத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர்களாகப் போட்டியிடப் போகும், 9 நாடாளுமன்ற வேட்பாளர்கள், 18 சட்டமன்ற வேட்பாளர்களை  மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிமுகப்படுத்தினார்.

அந்த அறிமுக நிகழ்ச்சியின்போது உரையாற்றிய டாக்டர் சுப்ரா, பல்வேறு காரணங்கள், பரிசீலனைகளுக்குப் பின்னர் இந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று கூறினார்.

மேலும், தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, கட்சி நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையோடு தேசிய முன்னணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட டாக்டர் சுப்ரா, “அதே வேளையில் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராக உறுப்பியக் கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தல் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் அத்தகைய உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய முன்னணி உச்ச மன்றம் உறுதியான முடிவை எடுத்துள்ளது” என்றும் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

மஇகா வேட்பாளர்களுக்கு எதிராக யாராவது, செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்றும் டாக்டர் சுப்ரா மஇகாவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.