Home தேர்தல்-14 அம்னோவுக்கு எதிரான 16 உறுப்பினர்கள் வழக்கு தள்ளுபடி!

அம்னோவுக்கு எதிரான 16 உறுப்பினர்கள் வழக்கு தள்ளுபடி!

853
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ சட்டப்பூர்வமானது தானா? என்பதை உறுதி செய்யும்படி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 16 ‘நீக்கப்பட்ட’ அம்னோ உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி கமாலுடின் முகமது சையத் வழங்கிய தீர்ப்பில், “சங்கங்களின் பதிவிலாகா சட்டம் 1966, பிரிவு 18 சியின் படி, உள்கட்சி விவகாரத்தை உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டு வர முடியாது. எனவே இந்த மனு செலவுகள் இன்றி நிராகரிக்கப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, 16 உறுப்பினர்கள் சார்பு வழக்கறிஞர் முகமது ஹனீப் கத்ரி அப்துல்லா கூறுகையில், மேல்முறையீட்டு மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice