Home தேர்தல்-14 “புக்கிட் மெலாவத்தி கிடைத்தது அதிருஷ்டம்” – சிவமலருக்குப் பதில் போட்டியிடும் ஜூவாய்ரியா பேட்டி!

“புக்கிட் மெலாவத்தி கிடைத்தது அதிருஷ்டம்” – சிவமலருக்குப் பதில் போட்டியிடும் ஜூவாய்ரியா பேட்டி!

1247
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது, கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் புக்கிட் மெலாவத்தி தொகுதியில், பிகேஆர் சார்பில் போட்டியிட வந்த வழக்கறிஞர் சிவமலர் கணபதி, கடைசி நேரத்தில் அடையாள அட்டையில் இருந்த வேறு மாநில முகவரி காரணமாக, வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டார்.

பகாங் மாநிலத்தில் பிறந்த சிவமலர், தனது அடையாள அட்டையில் உள்ள முகவரியை சிலாங்கூர் மாநிலத்திற்கு மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால், சிலாங்கூர் சட்டமன்றத்தில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் போட்டியிடுபவர் சிலாங்கூரில் பிறந்தவராகவோ அல்லது சிலாங்கூருக்கு தனது முகவரியை மாற்றிக் கொண்டவராகவோ இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடைசி நேரத்தில் புக்கிட் மெலாவத்தி தொகுதி கையைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக, பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஜூவாய்ரியா சுல்கிப்ளி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இதனிடையே, கடைசி நேரத்தில் தனக்குக் கிடத்த இந்த வாய்ப்பை எண்ணி இப்பவும் தான் ஆச்சரியப்படுவதாக ஜூவாய்ரியா தெரிவித்திருக்கிறார்.

“அன்று காலை சிவமலருடன் வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடத்திற்குச் சென்றேன். உள்ளே சென்ற சிவமலர் பரபரப்பாக வெளியே வந்தார். எல்லோரும் அவரிடம் கேள்வி எழுப்பினோம். பின்னர் தான் அவரது அடையாள அட்டை முகவரில் இருந்த பிரச்சினை புரிந்தது.

“பின்னர், தலைவரிடமிருந்து (டாக்டர் வான் அசிசா) எனக்கு அழைப்பு வந்தது. ‘ஜூ, இப்போது போ, அரங்கத்திற்கு உள்ளே போ.. சிவமலருக்குப் பதிலாக தாக்கல் செய். இது உனது அதிருஷ்டம்’ எனத் தெரிவித்தார்.

“அதன் பின்னர், சரியாக 1 மணி நேரத்தில், வைப்புத் தொகை பணம் 8000 ரிங்கிட் உட்பட அனைத்தும் வசூல் செய்யப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் சுமூகமாக முடிந்தது” என்று ஜூவாய்ரியா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றியிருக்கும் ஜூவாய்ரியா, அந்த அனுபவத்தை வைத்து தான் போட்டியிடும் தொகுதியில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் கூறியிருக்கிறார்.