Home நாடு 1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு

1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு

1206
0
SHARE
Ad
மகாதீருடன் ஜஸ்டோ….

கோலாலம்பூர் – தாய்லாந்தில் சிறைவைக்கப்பட்ட பெட்ரோ சவுதி ஊழியர் சேவியர் ஜஸ்டோ என்ற பெயரை மலேசிய அரசியல் ஆர்வலர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். மிகவும் நுணுக்கமான, சிலந்தி வலைப் பின்னல் போன்ற அணுகுமுறையோடு 1எம்டிபி தொடர்பான பணம் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதில் பெட்ரோ சவுதி நிறுவனத்தின் பெயரும் பயன்படுத்தப்பட்டது.

பெட்ரோ சவுதி ஊழியரான ஜஸ்டோ இது தொடர்பான மின் அஞ்சல்களை வெளியிட்ட காரணத்தினால்தான் 1எம்டிபி பணம் ஜோ லோவின் நிறுவனங்களில் ஒன்றான குட் ஸ்டார் லிமிடெட் நிறுவனத்திற்கு எப்படிப் போய் சேர்ந்தது என்பது போன்ற தகவல்களை சரவாக் ரிப்போர்ட் என்ற இணையத் தளமும் மற்ற ஊடகங்களும் புலனாய்ந்து வெளியிட முடிந்தது.

இதைத் தொடர்ந்து தனது உயர் அதிகாரியை மிரட்டுகிறார் என பெட்ரோ சவுதி உயர் அதிகாரிகள் புகார்கள் தெரிவிக்க அதைக் காரணம் காட்டி அவர் தாய்லாந்தில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் 2015-இல் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றாலும், தாய்லாந்து மன்னரின் மன்னிப்பைப் பெற்று 2016-இல் சிறையிலிருந்து வெளியே வந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று மகாதீரைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

“இது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. மறக்க முடியாத தருணம்” என மகாதீருடனான தனது சந்திப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜஸ்டோ மகாதீருடனான புகைப்படத்தையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.