Home உலகம் அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக அன்வார் துருக்கியில் ஓய்வு

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக அன்வார் துருக்கியில் ஓய்வு

809
0
SHARE
Ad

இஸ்தான்புல் – துருக்கியில் தனது முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையை முடித்துக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு நாளை வியாழக்கிழமை அவரது வலது தோள்பட்டையில் மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து கொண்டும், வெளியில் சென்றும் தனது குடும்பத்தினர் மற்றும் பேரப் பிள்ளைகளுடன் அன்வார் தனது நேரத்தைச் செலவிட்டார்.

இஸ்தான்புல்லில் உள்ள துருக்கிய மற்றும் இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தையும் அன்வார் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றிப் பார்த்தார் (படம்). அந்த அருங்காட்சியகத்தில் பழங்காலத் திருக்குரான் எழுத்து வடிவங்களைக் கண்டு தான் வியந்ததாகவும் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கும் அன்வார், அந்த அருங்காட்சியகத்திற்கான தனது வருகையை ஏற்பாடு செய்து உபசரித்த அதன் இயக்குநருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

பின்னர், இஸ்தான் புல்லில் உள்ள அழகான குல்ஹானே பூங்காவிற்கும் (Gulhane Park) தனது குடும்பத்தினருடன் சென்று மாலை நேர நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

அன்வாரை துருக்கிய அதிபர் எர்டோகன் மருத்துவனை சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

படங்கள்: நன்றி – அன்வார் இப்ராகிம் முகநூல் பக்கம்