Home நாடு சக அமைச்சருடன் வேதமூர்த்தி சந்திப்பு

சக அமைச்சருடன் வேதமூர்த்தி சந்திப்பு

2081
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பிரதமர் துறையின் அமைச்சராக – தேசிய ஒற்றுமைத் துறை மற்றும் சமூக நலத் துறை – ஆகிய பொறுப்புகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தனது அமைச்சுப் பணிகளைத் தொடக்கி நடத்தி வருகிறார்.

பிரதமர் துறையின் சக அமைச்சரான சபாவைச் சேர்ந்த லியூ வுய் கியோங்குடன் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 20)  சந்திப்பு ஒன்றை நடத்தி அமைச்சுப் பணிகள் குறித்து வேதமூர்த்தி விவாதித்தார்.

சபா மாநிலத்தைச் சேர்ந்தவரான லியூ வுய் கியோங், சட்டத் துறை பிரிவுக்கு பிரதமர் துறையில் பொறுப்பேற்றுள்ளார்.