ரபிசியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட முகப்பு புகைப்படத்தில் அவரது அணியில் இடம் பெறும் பிகேஆர் தலைவர்கள் அணி இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியத் தலைவர்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு தவணைகள் பணியாற்றிய கேசவன் 2018 பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்திற்கு பிகேஆர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். மலாய் மொழியில் சிறந்த முறையில் புலமையோடு, மேடை உரை ஆற்றும் வல்லமை படைத்தவர் கேசவன் என பிகேஆர் கட்சி வட்டாரங்களில் அவர் பாராட்டப்படுகிறார்.