கான்பெரா – ஆஸ்திரேலிய அரசியலில் திடீர் திருப்பமாக இன்று வெள்ளிக்கிழமை ஸ்கோர் மோரிசன் ஆஸ்திரேலியப் பிரதமராக, மால்கம் டர்ன்புல்-லுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் 14-ஆம் தேதி மால்கம் டர்ன்புல் அப்போதைய பிரதமர் டோனி அப்போட்டுக்குப் பதிலாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றோடு அவரது பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வந்து, அவருக்குப் பதிலாக ஸ்கோட் மோரிசன் பிரதமராகப் பதவியேற்றார்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொருளாளரான ஸ்கோட் புதிய தலைவராகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.