புத்ரா ஜெயா – அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கின் நியமனம் மறு ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுகுறித்து இன்று கருத்துரைத்த பிரதமர் துன் மகாதீர், மஸ்லீயின் நியமனம் குறித்து பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்றும் அவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
மஸ்லீயின் நியமனம் கல்லில் செதுக்கப்பட்ட முடிவல்ல என்றும் மாற்ற முடியாத ஒன்றல்ல என்றும் குறிப்பிட்ட மகாதீர், இது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கல்வி அமைச்சர் மஸ்லீயும் இது குறித்து தான் குழப்பத்தில் இருப்பதாகவும் பிரதமரின் ஆலோசனையை நாடப் போவதாகவும் கூறியிருக்கிறார்.