Home இந்தியா 2 நாட்களுக்கு சென்னையில் கடும் மழை – மலேசியர்களுக்கும் எச்சரிக்கை

2 நாட்களுக்கு சென்னையில் கடும் மழை – மலேசியர்களுக்கும் எச்சரிக்கை

1586
0
SHARE
Ad
2015-இல் சென்னையில் ஏற்பட்ட மோசமான வெள்ளம்

சென்னை – அடுத்த 2 நாட்களுக்கு சென்னையிலும், தமிழகத்திலும் கடும் மழை பெய்யலாம் அதனைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து சென்னைக்கு செல்லும் மலேசியர்களும் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தினமும் பல விமானப் பயணங்கள் சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கு மேற்கொள்ளப்படுவதால், நூற்றுக்கணக்கான மலேசியர்கள் பல்வேறு காரணங்களுக்காக தமிழகம் செல்கின்றனர். பொதுவாக பலர் சென்னை அல்லது திருச்சி சென்றடைந்ததும், அங்கிருந்து கார் அல்லது பொதுப் போக்குவரத்துகளின் துணையோடு தங்களின் சொந்த ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் செல்வது வழக்கம்.

#TamilSchoolmychoice

கடும் மழை காரணமாக, சாலைகள் பாதிக்கப்படலாம், வெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்துகள் பாதிப்படலாம் என்பதால் சென்னை, திருச்சி செல்லும் மலேசியர்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.