Home வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்

1383
0
SHARE
Ad

மக்களின் வாழ்க்கை முறைகளையும், உலகின் போக்கையும் மாற்றிய நிறுவனங்களின் வரிசையில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பில் கேட்சுக்கு உருவாக்கித் தந்த நிறுவனம் மைக்ரோசோஃப்ட்.

1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உலகில் கணினிகளின் ஆதிக்கம் தொடங்கப் போகிறது என்ற கணிப்புகளுக்கு மத்தியில் ஐபிஎம் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் கணினிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டன. கணினிகள் மூலம் இந்த நிறுவனங்கள் பெரும் செல்வத்தை ஈட்டப் போகின்றன என்ற வணிக ஆரூடங்களுக்கு மத்தியில், இரண்டு இளைஞர்கள், பணபலம் இன்றி, உருவான கணினிகளுக்கான மென்பொருளையும், இயங்குதளத்தையும் (ஓபரேடிவ் சிஸ்டம்) வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பாதிலயிலே படிப்பை முடிக்காமல் வெளியேறிய பில் கேட்ஸ் மற்றும் பால் அலென் 1975-ஆம் ஆண்டில் தொடங்கிய நிறுவனம்தான் மைக்ரோசோஃப்ட்.

பால் அலென் அண்மையில்தான் காலமானார்.

மைக்ரோசோஃப்ட் நிறுவனர்கள் பில் கேட்ஸ் – பால் அலென்…
#TamilSchoolmychoice

நாளடைவில், விண்டோஸ் என்ற அவர்களின் கணினிகளுக்கான மென்பொருள் இல்லாத கணினிகளே உலகில் இல்லை என்ற நிலைமை ஏற்பட, உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்தார் பில் கேட்ஸ். இன்றுவரை அந்த நிலையில் ஒன்றாவதாகவோ, இரண்டாவதாகவோ தொடர்ந்து நீடித்து வருகிறார்.

மைக்ரோசோஃப்ட் இன்று பல்வேறு மென்பொருள் தயாரிப்புகளோடு, உலகில் அது இல்லாத கணினிகளே இருக்க முடியாது என்ற அளவுக்கு பிரம்மாண்டமான ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைக்கு நீங்கள் பயன்படுத்தும் கணினியின் உள்ளே இயங்கும் மென்பொருள் முதற்கொண்டு பல அம்சங்களில் உங்களின் வாழ்க்கை முறையை உங்களுக்குத் தெரியாமலே மாற்றியிருக்கும் நிறுவனம் மைக்ரோசோஃப்ட்.

இன்று உலகம் எங்கும் 124 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 724 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பு என தொடர்ந்து புத்தம் புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளோடு அரசு வளர்ச்சி கண்டு வரும் நிறுவனம் இது.

இந்த நிறுவனம் குறித்து இந்தியர்களாகிய நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் இன்னொரு அம்சம் – இதன் தலைமைச் செயல் அதிகாரி, சத்யா நடெல்லா என்ற இந்தியர்.

மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து வழிகாட்டி வருவதோடு, இந்நிறுவனம் மூலம் தான் சேர்த்த பெரும் சொத்துகளைக் கொண்டு, அறவாரியம் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதும் ஏழைகளுக்கு, சுகாதார ரீதியில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் பில் கேட்ஸ்.

அந்த வகையில் தொழில் நுட்ப ரீதியிலும், வாழ்க்கை முறையிலும் மட்டுமின்றி, ஏழைகளின் வாழ்க்கை முறையை பில் கேட்ஸ் மூலம் மாற்றியமைத்ததிலும் மைக்ரோசோஃப்ட் தனித்து நிற்கிறது.

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’