புத்ரா ஜெயா – டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தார். சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்காக சூரிய சக்தியிலான மின் ஆற்றல் உற்பத்தித் தகடுகளைப் பொருத்துவது தொடர்பில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் மீது வாக்குமூலம் வழங்க அவர் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இன்று காலை 9.22 மணியளவில் அவரது கார் ஊழல் தடுப்பு ஆணையத்தில் நுழைந்தது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சரவாக் பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டத்தின் கீழ் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சோர் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதே விவகாரம் தொடர்பில் ரோஸ்மாவின் சிறப்பு உதவியாளர் ரிசால் மன்சோரும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.