Home நாடு சீ பீல்ட் ஆலய கலவரம் போன்று மீண்டும் நிகழாது – மகாதீர் உறுதி

சீ பீல்ட் ஆலய கலவரம் போன்று மீண்டும் நிகழாது – மகாதீர் உறுதி

1378
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – திங்கட்கிழமை (நவம்பர் 26) அதிகாலையில் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் நிகழ்ந்த மோதல்கள், கலவரங்கள் போன்று இனியும் நடைபெறாது என பிரதமர் துன் மகாதீர் உறுதி வழங்கியுள்ளார்.

“இது போன்ற விவகாரங்களைக் கையாள்வதற்கு மத்திய அரசாங்கத்திற்குத் தெரியும். எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாது. அவற்றை நிறுத்துவதற்கு எங்களுக்கு வழிமுறைகளும் தெரியும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

சிறந்த கல்விமான்களுக்கான பரிசளிப்பு விழாவில் நேற்றிரவு கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.