Home நாடு கேமரன் மலை: ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாரங்களை சேகரித்து வருகிறது

கேமரன் மலை: ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாரங்களை சேகரித்து வருகிறது

1682
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக அதன் தலைமை ஆணையர் சுக்ரி அப்துல் கூறினார்.

நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது ஆதாரங்களை கேகரித்து வருவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தின் முடிவு சாட்சிகளின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட சான்றுகள் இருந்தால், நாம் விசாரணையைத் தொடரலாம். நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக நாங்கள் இன்னும் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்”, என அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிவராஜாவிற்கு எதிராக புகார்கள் ஏதும் இதுவரையில் பெறப்படவில்லை எனவும், ஆனால், ஒரு விசாரணையை தொடங்குவதற்கு  ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு செய்தி அறிக்கைகள் போதுமானது என சுக்ரி தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேசிய முன்னணி வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவுத் தருமாறு,  மொத்தமாக 2,100 ரிங்கிட் வழங்கியதாக பூர்வக்குடியினரின் தலைவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும், 12 நாட்கள் பிரச்சாரக் காலத்தில் 200 ரிங்கிட், செலவுப் பணமாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தனர்.   

வாக்குகளை வாங்குவதற்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுவதை சிவராஜா மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.