Home நாடு கட்சி உறுப்பினர்கள் அமைதிக் காக்கவும்!- சாஹிட் ஹமிடி

கட்சி உறுப்பினர்கள் அமைதிக் காக்கவும்!- சாஹிட் ஹமிடி

862
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில்  அக்கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, இதர உறுப்பினர்களை அமைதிக் காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தற்காலிகமான போக்கு என்றும், ஒரு வேளை இனம் மற்றும் மதத்திற்காக, கட்சியை முன்னெடுத்துச் செல்லும் போது, இம்மாதிரியான விலையைக் கொடுத்தாக வேண்டியிருக்கும் போல என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்தார். 

ஆயினும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களை இம்மாதிரியான செயல்பாடுகள் கலங்கச் செய்யாது என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று மட்டும் ஆறு முக்கியத் தலைவர்கள் அம்னோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, 14-வது பொதுத் தேர்தலில் 54 தொகுதிகளில் வெற்றிப் பெற்ற அம்னோ, தற்பொழுது 38 தொகுதிகளை மட்டும் தக்க கொண்டுள்ளது.