Home நாடு மத்தியில் நான்கு இந்திய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்!

மத்தியில் நான்கு இந்திய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்!

1025
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுச் செய்திக்கு பிறகு, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராவ் வாஜ்டி டுசுகி, விடுத்த அறிக்கையில், மத்திய அமைச்சர்களான, பி. வேதமூர்த்தி, எம். குலசேகரன், கோபிந்த் சிங் டியோ மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீது குற்றஞ்சாட்டும்படி அரசாங்கத் தலைமை வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டார்.  மேலும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. கணபதிராவ் மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றார் அவர்.

நாட்டு அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் அளவிற்கு பேசியதால், குற்றவியல் சட்டம் 504 கீழ், இவர்கள் ஐவர் மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி விலக வேண்டும். ஏனெனில், அவர் இனவாத பதட்டங்களை தூண்டியதோடு இல்லாமல், இந்திய மக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தி, சீ பீல்ட் கோயிலில் இரண்டாவது நாளில் கலவரத்திற்கு வழிவகுத்துள்ளார்” என  அவர் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தின் நிருவாக உறுப்பினர்களாக இருப்பவர்கள் இனவாத உணர்வுகளை தங்கள் அறிக்கையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

மேலும், அடிப்பின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதற்காக விரைவான நடவடிக்கையை எடுக்குமாறு காவல் துறையை அஸ்ராவ் கேட்டுக் கொண்டார்.

அம்னோ இளைஞர் பகுதி, பொதுமக்களை அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி, நிலைமையை மோசமாக்கும் இன, மத உணர்ச்சி உணர்வுகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டது.