Home நாடு அம்னோ தலைவர்கள் பெர்சாத்துவில் ஆதிக்கம் செலுத்த முடியாது!

அம்னோ தலைவர்கள் பெர்சாத்துவில் ஆதிக்கம் செலுத்த முடியாது!

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் அதிகமான அளவில் பெர்சாத்து கட்சியில் இணைந்து வருவது, ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் அப்புதியக் கட்சியில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என்றக் கூற்றினை பிரதமர் மகாதீர் முகமட் மறுத்தார். அவ்வாறு ஒருபோதும் நடக்காது என அவர் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரையிலும் அவர்கள் எந்த பதவியிலும் இருக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

முந்தையக் கறை படிந்த பழக்கங்களோடு ஏற்றுக் கொள்ளப்படும் அம்னோ தலைவர்கள், நம்பிக்கைக் கூட்டணியில் இணையும் போது, அக்கட்சியின் நிலை பெரும்பாலான நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களிடத்தில் கேள்விக்குறியாக உள்ளது. யார் வேண்டுமானாலும் பெர்சாத்து கட்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மகாதீர் தெரிவித்திருந்தார்.