Home நாடு அடிப்: பிரேதப் பரிசோதணை அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும்!

அடிப்: பிரேதப் பரிசோதணை அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும்!

786
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மருத்துவ வல்லுநர்கள், இரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், மேலும், ஒரு மாதக் காலம் வரை தேவைப்படும் என துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார். எனினும், அடிப் மரணம் குறித்து உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த காய அறிக்கையே போதுமானது என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் நடந்த சீ பீல்ட் கோயில் கலவரத்தில் 24 வயதுடைய தீயணைப்பு வீரர், முகமட் அடிப் முகமட் காசிம் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினால் தாக்கப்பட்டு, டிசம்பர் 17-ஆம் தேதி தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.