கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசியா (Jaringan Melayu Malaysia) அமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா கைது செய்யப்பட்டார் என அவ்வமைப்புக் கூறியது.
மதியம் 2:45 மணியளவில் அஸ்வாண்டின் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கிள்ளான் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அமைப்புக் கூறியது.
இதற்கிடையே, சிலாங்கூர் மாநில சிஐடி தலைவர், பாசில் அகமட் கூறுகையில், அஸ்வாண்டின் அச்சுறுத்தியக் குற்றத்திற்காக, அதாவது அச்சுறுத்தலைக் கையாள்கின்ற குற்றவியல் சட்டம் 506-இன் கீழ் விசாரிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டார்.
நேற்று மாலை நடந்த பேரணியில், கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கலவரத்தைச் செய்தவர்களை கைது செய்யாவிட்டால் காவல் நிலையத்தைத் தாக்க தயாராக உள்ளதாக அஸ்வாண்டின் காவல் துறையை எச்சரித்தார்.