ஷா அலாம்: முன்னாள் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஒருவருக்கு, ஊழல் குற்றச்சாட்டுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 400,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களின் சிறப்பு அதிகாரியான சாய்லான் ஜாவ்ஹாரி, கோல சிலாங்கூர் மாவட்டத்தில், பள்ளியைச் சுத்தம் செய்யும் பணிக்கான இரண்டு நிறுவனங்களுக்கு அந்த வாய்ப்பினை தருவதற்காக, 80,000 ரிங்கிட் பணத்தைக் கையூட்டாகப் பெற்ற குற்றத்திற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
குற்றவாளியின் வழக்கறிஞர், முகமட் யுனோஸ் ஷாரிப், சாய்லான் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் நோயினால் பாதிப்புற்றிருப்பதாகவும், தற்போது பகுதி நேரம் வேலை செய்து தனது மூன்று குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வருவதாகவும் கூறினார்.
எனினும், அமர்வு நீதிமன்றம், சாய்லான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரை, தண்டனையை ஒத்தி வைப்பதற்கு அனுமதி தந்தது.