Home நாடு ரபிசி ரம்லி பிகேஆர் உதவித் தலைவராக நியமனம்

ரபிசி ரம்லி பிகேஆர் உதவித் தலைவராக நியமனம்

1066
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக பண்டான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோல்வியுற்றார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தியான் சுவா, டாக்டர் சேவியர் ஜெயகுமார், சுராய்டா கமாருடின் ஆகியோருடன் ரபிசி ரம்லி உதவித் தலைவர்களில் ஒருவராகச் செயல்படுவார் என அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளராக சைபுடின் நசுத்தியோன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.