Home நாடு சுல்தான் அப்துல்லா, நாட்டின் அடுத்த மாமன்னராகும் வாய்ப்பு!

சுல்தான் அப்துல்லா, நாட்டின் அடுத்த மாமன்னராகும் வாய்ப்பு!

1082
0
SHARE
Ad

பெக்கான்: சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா நேற்று (திங்கட்கிழமை) காலை 11:16 மணியளவில் பகாங் மாநிலத்தின் ஆறாவது ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த சுல்தான் அகமட் ஷா, உடல் நலம் குன்றி இருப்பதனால், அவருக்குப் பதிலாக இப்பதவியில் சுல்தான் அப்துல்லா அமர்த்தப்பட்டார்.

இந்த பிரகடன விழாவில், பகாங் மாநில அரசக் குடும்ப உறுப்பினர்கள், மாநில ஆட்சி உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் செம்ப்ரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதன் வாயிலாக, மலாய் ஆட்சியாளர்களின் சுழற்சி முறையில், அடுத்த மாமன்னராகும் வாய்ப்பு சுல்தான் அப்துல்லாவுக்கு அமைந்துள்ளது.