கோலாலம்பூர்: பந்துவான் சாரா ஹீடுப் ரக்யாட் திட்டத்தின் வாயிலாக பயனடையும் பொதுமக்களில், பி-40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் அடித்தட்டு மக்களுக்காக மைசலாம் (mySalam) எனும் பாதுகாப்புத் திட்டத்தினை பிரதமர் மகாதீர் முகமட் இன்று (வியாழக்கிழமை) தொடக்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்கும், அல்லது எதிர்பாராத 36 முக்கிய நோய்களினால் எழும் நிதி சிக்கல்களிலிருந்து விடுவபடவும், இந்த மைசலாம் திட்டம் உதவும் என்றார்.
இந்த திட்டமானது 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட, 3.69 மில்லியன் மக்களுக்கு நன்மையைப் பயக்கும் என நம்பப்படுகிறது.
ஒரு பொறுப்பான அரசாங்கமாக, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், விபத்துகள் மற்றும் நோய்களினால் மக்கள் எதிர்நோக்கும் வேதனைகளை புரிந்துக் கொண்டு செயல்படுகிறது என பிரதமர் தெரிவித்தார்.