செமினி: கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றியடைந்ததன் காரணமாக நடப்பு அரசாங்கமான, நம்பிக்கைக் கூட்டணி அரசு கருவத்தில் உள்ளதாக செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிஎஸ்எம் கட்சி வேட்பாளர் நிக் அசிஸ் அபிக் அப்துல் குறிப்பிட்டார். இந்த கருவத்தினால் மக்களின் குறைகளைக் கேட்பதற்கு அரசுக்கு நேரமில்லாமல் போய் விட்டதாக அவர் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியை அமைத்ததிலிருந்து, பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஒருவர் பிடிபிடிஎன் அதிகாரிகளை சந்திப்பதற்கு இந்நாள் வரையிலும் முயற்சித்து அது தோல்வியில் முடிந்ததாகத் தெரிவித்தார்.
செமினி சட்டமன்ற மக்கள், அரசுக்கு தகுந்த பதிலடியைக் கொடுக்க வேண்டுமென்றும், மக்களின் குரலை கேட்டே ஆக வேண்டும் என அறிவுறுத்தும் வண்ணமாக இந்த சட்டமன்றத் தேர்தல் அமைய வேண்டும் எனவும் அவர் சாடினார்.
பெரிய அளவில் வெற்றிப் பெற்றதன் காரணமாக அரசு நிலை தடுமாறி போய் விட்டது என அவர் கூறினார்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றால், அடுத்து மக்களுக்குச் செய்ய வேண்டியதை அரசு தானாக செய்யும் என நிக் மக்களுக்கு நினைவூட்டினார்.