Home நாடு செமினி: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

செமினி: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

613
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணிக்குத் தொடங்கியது. 858 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 761 பேர் செமினி பொதுப் படைப் பிரிவு பட்டாலியன் 4-இல் அமைந்திருக்கும் வாக்குச் சாவடியில் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். மேலும், 97 பேர் காஜாங் மாவட்ட காவல் தலைமையகத்தில் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

செமினி பொதுப்படை பிரிவு பட்டாலியன் 4-இல் திறக்கப்பட்டிருக்கும் வாக்குப் பதிவு மையம் காலை 8:00 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5:00 மணி வரையிலும் இயங்கும். அதே நேரத்தில் காஜாங் தலைமையகத்தில் உள்ள வாக்குப்பதிவு மையம்,  காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

#TamilSchoolmychoice

முன்னதாக, செமினி சட்டமன்றத் தேர்தல் நிறுத்தப்பட வேண்டும் என செமினி சட்டமன்றத் தொகுதி வாக்காளர் ஒருவர் தொடுத்திருந்த வழக்கை நேற்று (திங்கட்கிழமை) உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.